Sizzling Nisha
Everyone who has born in this earth will have some talent with them like that its a small steping stone works of mine.
Thursday, September 8, 2011
Friday, February 18, 2011
சாலைகள், தேர்தல்கள், ஊழல்கள்'
சாலைகள், தேர்தல்கள், ஊழல்கள்
இந்தியச் சாலைகளின் வரலாறு அசோகர் காலத்தில் இருந்து துவங்குகின்றது. அசோகர் சாலைகளின் இரு பக்கமும் மரங்களையும் சேர்த்தே வளர்த்தார். ஆகவே வெள்ளையர்களின் ஆட்சியிலும் சாலை விரிவாக்கப் பணிகளில் மரம் வளர்ப்புக்கும் சேர்த்தே முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.
ஆங்கிலேயர்கள் இந்தியாவை விட்டுப் போய் 64- ஆண்டுகள் ஆகிவிட்டன. அவர்கள் விட்டு சென்ற சாலைகள், பாலங்களும் இன்னும் உறுதியாக நிற்கின்றன. ஆனால், நம்மவர்கள் போடும் சாலைகள் ஒரே மழையில் காணாமல் போய்விடுகின்றன. ஆங்கிலேயர்கள் சாலை போடும் காலத்தில் ஊழலும் குறைவு. நவீன இயந்திரங்களும் கிடையாது. ஆனால், இப்போது இரண்டுமே அதிகரித்து விட்டது. அதனால்தான் என்னவோ, சாலைகளின் ஆயுள் குறைந்து கொண்டே வருகிறது.
ஆனால், ஒவ்வொரு 100 கி.மீ. தொலைவு சாலையும் குறைந்தது 2,000 பெரு மரங்களை பலி கொள்வதாக ஓர் ஆய்வு வருத்ததுடன் தெரிவிக்கிறது (சிறிய மரங்கள், செடி, கொடிகள் இந்தக் கணக்கில் அடங்காது). சூழலியல் சார்ந்து இப்பிரச்னையை அணுகுவது ஒருபுறமிருக்கட்டும். இந்தியாவை இனி மரங்களற்ற நவீன சாலைகள் அதன் அடையாளங்களாக மாறும்.
சிங்காரச் சென்னையின் புற நகரச் சாலைகள் குண்டும், குழியுமாக காட்சி அளிப்பதால் வாகனங்கள் பல தெருக்களுக்குள் நுழைய முடியாத சூழ்நிலை. தாம்பரம் பேருந்து நிலையம் அமைக்கும் பணி, கிழக்கு தாம்பரம் - மேற்கு தாம்பரம் இணைப்பு மேம்பாலப் பணி ஆகியவையும் ஆமை வேகத்தில் நடந்து வருவதாகவும், பணிகள் முடிக்கப்பட்ட இடங்களில் சாலைகள் போடப்படாததன் காரணமாக, பள்ளிக் குழந்தைகள், பெரியவர்கள் உட்பட அனைத்துத் தரப்பு மக்களும் வெகுவாக பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் தொடர்ச்சியாக ஊடகங்களில் செய்திகளில் வெளிவந்த வண்ணம் இருந்தன. எதிர்கட்சியும் தன் பங்கிற்கு சாலைகள் சரியில்லை என சாலை மறியல் செய்து மறந்து விட்டனர் இவ்வேளையில் தேர்தலை ஒட்டி இந்த சாலைப் பணிகள் எல்லாம் ஏதோ போர் காலத்தில் நடைபெறும் பணிகள் போன்று துரிதப் படுத்தப் படுகின்றன.
துரிதப்படுத்தப் படுகின்றன என்பதால் என்பதால் வேலைகள் நடக்கின்றன-? என்பது அதன் பொருளல்ல. தேங்கியிருந்த சாலை மற்றும் பாலங்கள் கட்டும் பணிகள் பெயருக்கு தான் நடக்கின்றன. ஒரு கோடை மழை வந்தால் போதும் வெளுத்து விடும். மீண்டும் பழைய கதைதான்.
தேர்தலை ஓட்டி சாலைகளையும், பாலங்களையும் கட்டி முடிக்காமல் அதனை முறைப்படி இன்றை அரசு கட்டி முடிக்கமானால் வரும் தேர்தலில் அதற்கான பலன் கிடைக்கும்.

Subscribe to:
Posts (Atom)